ஆச்சரியப்படுத்தும் 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த்..!

  • by
14 year old abhigya anand's astrology predictions

2013ஆம் ஆண்டு 7 வயது சிறுவனை இந்தியன் டைம்ஸ் பத்திரிக்கை, ஜோதிடத்தைப் பற்றிய ஒரு நேர்காணலை செய்தது. அப்போது சிறுவன் சொன்ன அனைத்தையும் மக்கள் விமர்சனமாக பார்த்தார்கள். இன்றும் இவன் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறான் என்று அவனின் நம்பிக்கையை தகர்த்தார்கள், இருந்தாலும் தான் செய்யும் செயலை இடைவிடாமல் தன்னுடைய யூடியூப் பக்கத்தின் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வந்தார். இப்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று நாம் இப்போது அனுபவித்து வரும் பிரச்சினையை பற்றியும் பேசியுள்ளார்.

ஜோதிட சிறுவன்

சிறு வயது முதல் ஜோதிடத்தில் அதிக அளவில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் யூடியூபில் “கான்சயன்ஸ்” என்ற சேனலை உருவாக்கினார். அதைத்தொடர்ந்து ஜோதிடத்தில் உண்டாகும் மாற்றங்களைப் பற்றி அவ்வப்போது காணொளிகளை பதிவிட்டு வந்தார். இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ஒரு காணொளியில் கொரோனா வைரஸ் பற்றிய பாதிப்புகள், அதனால் நாம்படும் கஷ்டங்கள் என அனைத்தையும் தெளிவாக கூறியிருந்தார். அப்போது அச்சிறுவனை கேலி செய்த மக்கள் இப்போது அவர் சொல்லிய விஷயங்கள் நடப்பதை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்துள்ளார்கள்.

மேலும் படிக்க –ஐயப்பன் தோன்றியதன் ரகசியம்!!!

கொரோனா வைரஸ்

2019 நவம்பர் மாதம் முதல் 2020 மே மாதம் வரை ஒருவிதமான வைரஸ் தொற்று உலகம் முழுக்க பரவப் போகிறது, அது ஒரு போர் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத் தவிர்த்து அதற்கு எதிராக மனிதர்களும் மனிதமும் போராடும் என்றும், இதன் தாக்கம் ஏப்ரல் ஒன்றாம் தேதி அதிகளவில் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சீனாவில் வைரஸ் நவம்பர் மாதம் துவங்கியது இவர் குறிப்பிட்ட தேதிகளில் பாதிப்புகள் அதிகரித்தது. இது அனைத்தும் மே மாதம் இறுதிக்குள் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார். நடக்கும் பிரச்சினைகளை மிகத்துல்லியமாக கண்டறிந்த இவரின் ஜோதிடத்தினை பார்த்து பல ஜோதிட பிரபலங்கள் வியந்தார்கள்.

பொருளாதாரப் பிரச்சினை

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை கணித்த இச்சிறுவன் உலகப் பொருளாதாரத்தை பற்றியும் பேசியுள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு செல்லும் இந்த பிரச்சனை 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். இதைத்தவிர்த்து தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் பெட்ரோல் விலை குறையும் என அனைத்தையும் சரியாக கணித்துள்ளார்.

கோள்களின் மாற்றம்

இது போன்ற மாற்றங்கள் உண்டாகுவதற்குக் காரணம் நம் அண்டத்திலிருக்கும் கோள்கள்தான். செவ்வாய் மற்றும் சனி போன்ற கோள்கள் நேரடியாக பூமியை தாக்கும் இதைத் தவிர்த்து நிலா மற்றும் வியாழன் இதுவும் ஒரே நேர்கோட்டில் இணைகிறது. இதன் மூலமாக இந்த சக்தி அனைத்தும் பூமியை பெரிதாக தாக்குகிறது. இதன் மூலமாகவே இந்த குறுகிய காலத்தில் பூமியில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதுவும் நீரினால் உண்டாகும் பிரச்சினைகள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளார்.

மேலும் படிக்க – நாகா தீவை நோக்கிய பயணத்தில் வேதாளத்தின் கேள்வி!!!

நீரால் உண்டாகும் பிரச்சினை

நீரால் உண்டாகும் பிரச்சினை என்று இச்சிறுவன் குறிப்பிட்டுள்ளார், நீர் என்றால் நாம் இரும்பும்போது வெளியாகும் நீர் மற்றும் தும்பும் போது வெளியாகும் நீர். இதன் மூலமாகவே கொரோனா போன்ற கொடிய வைரஸ் பரவுகிறது. இன்னும் இதுபோன்ற நீரினால் உண்டாகும் பிரச்சனையினால் உலகத்தில் இருக்கும் ஏராளமான மக்கள் பாதிப்படைவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அடுத்த சில வருடங்களில் நமக்கு ஏராளமான இன்னல்களை உண்டாக்கும் வகையில் கிரகங்கள் அமைந்துள்ளது. எனவே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளையும் மிகத் தெளிவாகவும், பொறுப்புடன் எடுக்க வேண்டும். இதுதான் நம்முடைய எதிர்காலத்தை பாதுகாக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன