10 சிறந்த எண்ணெய் பசை சருமத்திற்கான குளிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய கிரீம்கள்

10 best creams to treat your oily skin during winter season

நம் சருமத்தை பாதுகாப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாக மாறி வருகிறது, அதுவும் குளிர்காலங்களில் நம் சருமம் அதிக அளவில் வறர்ச்சி அடைகிறது. நம் சுற்றுச் சூழல் மற்றும் தட்பவெப்ப சூழ்நிலையால் எண்ணெய் பசை சருமம் அதிகளவில் பாதிப்படைகிறது. இதில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக பலவகையான க்ரீம்களை நாம் பயன்படுத்தி வருகிறோம், அப்படி நாம் பயன்படுத்தப்படும் கிரீம்கள் சரியானதா என்பதை தேர்ந்தெடுக்கும் வகையில் சிறந்த 10 க்ரீம்களை இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம்.

1. ஜோவிஸ் இமாலயன் ஜெரி கோல்ட் க்ரீம்

எண்ணைப் பசை உள்ள சருமத்திற்கான சிறந்த கிரீம்களில் பட்டியலில் முதலில் இருப்பது இதுதான். இதில் கற்றாழை, ஆலிவ் எண்ணை, பாதாம் சாறு, கேரட் சாறு, வைட்டமின் ஏ மற்றும் ஈ சக்திகள் இருப்பதினால் நமது சருமத்தை பாதுகாத்து அதற்கேற்ற ஊட்டமளிக்கிறது. இது உங்கள் எண்ணெய் சருமத்தை ஈரப்பதம் ஆக்குகிறது. இதில் இருக்கும் ரோஸ் நீர் நம் சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. 

2. விஎல்சிசி கோல்டு கிரீம்

ஓர் அற்புதமான நறுமணத்துடன் இருக்கும் இந்த கிரீமில் கற்றாழை, ஆலிவ் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், குங்குமப்பூ, திராட்சை விதைகளின் சாறுகள், வைட்டமின் ஈ மற்றும் ரோஜா இதழ்களின் சாறுகள் இதில் உள்ளடங்கி உள்ளது. இதனால் உங்கள் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தை புதுப்பித்து குளிர்காலங்களில் பிரகாசமாக இருக்க உதவுகிறது.

மேலும் படிக்க – கூந்தல் பிரச்சினையிலிருந்து விடுபட!

3. கார்னியர் ஸ்கின் நேச்சுரல்ஸ் கோல்டு கிரீம்

கார்னியர் நிறுவனத்திடமிருந்து வெளியான ஒரு அற்புதமான கிரீம் இது. இதில் ஹைட்ரோ பிக்சேஷன் சக்தி குளிர்கால காற்று நம் சருமத்தின் மேல் படும்பொழுது எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இந்த கிரீம் நம்மை பாதுகாக்கிறது. இது நம் சருமத்தின் மேல் இருக்கும் எண்ணெய் பசைகளை உடனடியாக உறிஞ்சி நம் சருமத்தின் மேல் படர்ந்து நம்மை பாதுகாக்கிறது.

4. பான்ஸ் மாய்ச்சுரைசிங்  கோல்டு கிரீம்

இது நம் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும் ஓர் அழகு க்ரீம் ஆகும், இதை எண்ணெய் பசை உள்ள சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் குளிர் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து உடனடியாக இது தீர்வு காண உதவுகிறது. இதற்காகவே இதை பலமுறை சோதித்து இப்போது ஒரு அற்புதமான கிரீமாக உருவாக்கியுள்ளார்கள். இதில் இருக்கும் தனித்தன்மையால் குளிர்காலத்தில் காற்றினால் ஏற்படும் வறட்சியை உங்கள் சருமத்தை பாதிக்காமலிருக்க உதவுகிறது.

5. நிவியா கோல்டு க்ரீம்

குளிர் காலங்கள் இருக்கும் மாதங்கள் வந்துவிட்டாலே லிபியாவின் வேலை அதிகரித்துவிடுகிறது. நம் சருமத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள் மற்றும் சுருக்கங்கள் அனைத்தும் இது சரி செய்கிறது. இதை தவிர்த்து உங்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் பிறகு எந்த ஒரு வறட்சியான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கிறது. இது சருமத்தில் இருக்கும் வறட்சியை போக்குவது மட்டுமல்லாமல் நம் உடம்பில் ஏதாவது அலர்ஜி ஏற்படாமல் இது தடுக்கிறது.

மேலும் படிக்க – எளிய மேக் அப்புக்கு இதை இப்படி செய்யுங்க

6. லாக்மி ஸ்கின் கிளோஸ் வின்டர் கிரீம்

இது உங்கள் ஈரப்பதத்தை காக்கும் பூட்டை போல உழைக்கிறது. உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் மற்றும் ஒளிரும் வகையில் இந்த கிரீம் உங்களுக்கு பயனாகிறது. குளிர் காலங்களில் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை இது போக்கி உங்களை புத்துணர்ச்சியாக வைக்கிறது.

7. பிளாசம் கொச்சார் அரோமா மேஜிக் ஆலோவேரா கோல்டு கிரீம்

இதில் இருக்கும் கார்பனின் சக்தி உங்கள் சருமத்தின் மேல் ஒரு கவசம் போல படர்ந்து குளிர்காலங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் சரும பிரச்சனைகளில் இருந்து இது உங்களை காக்கிறது. இதை உங்கள் முகம் மற்றும் சருமம் அனைத்திற்கும் பயன்படுத்தலாம், தேவைப்பட்டால் உங்கள் குழந்தைகளுக்கும் இதை பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் சாறு கொண்டு உங்கள் சருமத்தை ஒளிர செய்கிறது. மற்ற க்ரீம்களை விட இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகமாக அதிகரிக்க உதவுகிறது.

8. இமாமி மலை கேசர் கோல்டு கிரீம்

மலாய் மற்றும் குங்குமப் பூக்களின் நன்மைகளைக் கொண்டது இந்த கிரீம். இதை நாம் பயன்படுத்துவதன் மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் வறண்ட சருமத்தை போக்குகிறது. இதைத்தவிர்த்து நம் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் பார்த்துக் கொள்கிறது. இதில் இருக்கும் குங்குமப்பூ உங்கள் சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது.

மேலும் படிக்க – முகத்தில் உடனடி பொலிவை பெறுவதற்கு இதை செய்யுங்கள்.!

9. வைட்டமின் இ கோல்டு கிரீம்

நம் சருமத்திற்கு மிக முக்கியமான ஒரு சத்துதான் வைட்டமின் ஈ இதன் பெயரிலேயே இந்த க்ரீம் இருப்பதினால் இதன் செயல்பாடு எந்த அளவில் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தக் கிரீமில் ஏகப்பட்ட மூலிகைப் பொருள்கள் இருக்கின்றன, இதில் இருக்கும் கற்றாழை ஜல்லி நமது சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. இது எண்ணெய் பசை சருமத்தை தவிர்த்து எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாகும்.

10. நைட் ட்ரீட்மென்ட் க்ரீம்

இதில் சந்தனம் மற்றும் குங்குமப்பூ இருப்பதினால் இரவு நேரங்களில் இதை தடவிக் கொண்டு படுத்தால் போதும் மறுநாள் உங்கள் சருமத்தில் ஓர் பாதுகாப்புத்திரை அமைத்தது போல் நீங்கள் உணருவீர்கள். இதில் இருக்கும் ஆயுர்வேத சக்தி மற்றும் பல வகையான மூலிகைகளை கலந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது மற்றும் குங்குமப்பூ உங்கள் சருமத்தை பொலிவாக மாற்ற உதவுகிறது.

இதிலிருக்கும் அனைத்துமே குளிர்காலங்களில் எண்ணெய் பசை மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடியவை. இது அனைத்துமே உங்கள் சருமத்தில் ஏதாவது ஒரு வகையில் ஈரப்பதத்தை உண்டாக்கி குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன