அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

  • by

அன்புக்குரியவரை ரசித்துக் கொண்டே இருங்கள் : 

உங்கள் காதல்  துணை பேசிம் பொழுது கவனியுங்கள்.  அதனை ரசியுங்கள் அவர் என்ன பேசுகிறார் என்பதைக்  தெரிந்து கொள்ளுங்கள் . அதற்குப் பதில் பேசி அவரை எப்பொழுதும் கவர்வதில் ஆர்வமாய் இருங்கள். ஆரோக்யமான காதலுக்கு உங்களவரின் பேச்சுகளை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம் ஆகும். 

மேலும் படிக்க: காதல் மொழியை கண்களில் பேசி மன்னிப்பு கேளுங்கள்

விட்டு கொடுங்கள்:

வாழ்வில் எந்த ஒரு செயலானாலும் விட்டுக் கொடுங்கள் வாழ்வை வெல்லலாம். உங்கள் காதல் இதயதிற்காக  விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பெண்களுக்கு எப்பொழுதும் அந்த குணம் உண்டு. பெண்களை போல் ஆண்கள் முந்திக் கொண்டு விட்டுக் கொடுத்தால் துணைக்குக் காதல் அதிகரிக்கும்.

காதலுக்குள் பொதுநலம் : 

 இருவருக்கும் மத்தியில் பேதம் வேண்டாம். இருவரும் பரஸ்பரம் உதவி செய்தல் அவசியம் ஆகும். இந்த விஷயத்தில் பெண்கள் எப்போதும் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஆண்கள் முந்திக் கொண்டு விட்டுக் கொடுத்தால் துணைக்குக் காதல் அதிகரிக்கும்.

மேலும் படிக்க: காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

காதல் பார்வையுடன் பரிமாற்றம்: 

காதலுக்கு நேரம் காலம் இல்லை இருவரும் எப்பொழுதும் அன்பில் பேதமின்றி வாழ வேண்டும்.  பரஸ்பரமான அன்பு பரிமாற்றம் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். நமக்கு ஆயிரம் வேலைகள் மன  அழுத்தங்கள் இருக்கலாம். ஆனால் பிரியக் காதலி கதலனிடம் எதையும் காட்டி சிக்கலில் மாட்ட வேண்டாம். 

துணைக்கான சுதந்திரம் அளிப்பது அவசியம் : 

 ஆண், பெண் இருவருக்கும்  காதலுக்குப் பின்னோ அல்லது திருமணத்திற்குப் பின்னோ தனியாக நேரம் கழிப்பதையோ, விரும்பியதைச் செய்யவோ முழு சுதந்திரம்  கொடுத்து காதல் உணர்வுடன் செயல்பட வேண்டும். 

வாழ்க்கையை இணைந்து நடத்தபோகும் இருவர் எதுவாக இருந்தாலும் இணைந்தே செய்தல் நலம்.  தனியாக செய்யும் தருணத்தில் அவரை ஊற்சாகப்படுத்தி செய்ய வைக்க வேண்டும். 

காதலித்தாலும தனி வாழ்க்கை இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அதற்கு இடமளித்தால் உங்கள் துணை உங்கள் வசம் இருப்பார்கள்.

 கருத்தை  பரிமாற்றத்தில் புரிதல் :

காதலர்க்ளுக்குள் கருத்து ஒற்றுமை அவசியமானது ஆகும். 

 என்னதான் உருகி உருகிக் காதலித்தாலும் நிச்சயம் ஆண், பெண் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரும் போகும் அதனை உடனடியாக மறந்து காதலில் இருவரும் இணைந்து இருக்க வேண்டும். 

மேலும் படிக்க: ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

 கருத்து மோதல்களுக்கு வழியில்லாமல் புரிந்து செயல்பட வேண்டும். அது ஆரோக்கியமாகத் தொடங்கி முடிந்தால் ஆபத்தல்ல. அது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். உங்கள் கருத்தை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் குறிக்கோளாக இருக்காமல் அதை விட்டுக் கொடுத்துப் போவது நல்ல வாழ்வை  எடுத்துச் செல்லும். 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன